Designed by Iniyas LTD
246 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டில் முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து இருந்தது. அஸ்வினும், சாகாவும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாளான நேற்று இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
265 பந்துகளில் அஸ்வின் சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அடித்த 4-வது சதம் இது ஆகும். அஸ்வினை தொடர்ந்து சாகாவும் 223 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் 104 ரன்களில் சாகா ஆட்டமிழக்க, அஸ்வின் 118 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஜடேஜா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய வீர்ர்கள் இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார் ரன் கணக்கை துவக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோசப், கம்மீஸ் தலா 3 விக்கெட்டுக்களையும், கேப்ரியல் மற்றும் சாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கே.சி.பிராத்வெயிட், ஜான்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜான்சன் 23 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
பின்னர் கே.சி.பிராத்வெயிட்டும், பிராவும் ஜோடி சேர்ந்தனர். 141 பந்துகளில் பிராத்வெயிட் அரைசதம் அடித்தார். ஆட்ட நேர இறுதியில் வெஸ்ட் அணி 47 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. கே.சி.பிராத்வெயிட்(53), பிராவோ(18) ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இன்னும் 246 ரன்கள் அந்த அணி இந்தியாவை விட பின் தங்கியுள்ளது