Designed by Iniyas LTD
26 ஆவது நாளாக தொடரும் பன்னங்கண்டி மக்களின் நில மீட்பு போராட்டம்!
கிளிநொச்சியில் குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத்திட்டம் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 25ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
குறித்த போராட்டம் பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை
எனவே இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறு வாழ முடியாது என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.