தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

298 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது நியூசுலாந்து அணி

தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 298 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் 14 ஓட்டங்களிலும், அம்லா 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.newzeland_south

மழை பெய்ததால் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அடுத்து நிதானமாக விளையாடிய டுபிளசி அரைசதம் கடந்து 82 ஓட்டங்களும், ரூஸ்சோ 39 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 49 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 43 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் எடுத்தது. டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 65 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

நியூசிலாந்து அணியின் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், டிரென்ட் பால்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 43 ஓவருக்கு 298 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய மெக்கல்லம் அரைசதம் கடந்து 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 6 ஓட்டங்களில் மார்கல் பந்தில் போல்டானார்.

நியுசிலாந்து 11 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு  94 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மற்றொரு தொடக்க வீரரான கப்டில் மற்றும் ராஸ் டெய்லர் விளையாடி வருகின்றனர்.

Comments
Loading...