தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

3 நாட்களில் தடைக்காலம் முடியவுள்ளது:ஆனந்தத்தில் ஸ்ரீசாந்த்

3 நாட்களில் தடைக்காலம் முடியவுள்ளது:ஆனந்தத்தில் ஸ்ரீசாந்த்!!

6 வருடங்களுக்கு முன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆவார்.

அவர் அப்போது ஸ்பாட் பிக்சிங் செய்தார் என்று உறுதிப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இவர் இனி கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என தடை விதித்தது.

ஸ்ரீசாந்த் இந்த வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ஜூலை மாதம் அளித்த தீர்ப்பில் ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை ரத்து செய்தது.

இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஸ்ரீசாந்தின் தண்டனையின் அளவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என்று கூற, அதன்படி இந்தத் தடை அமல்படுத்தி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் இவரது வாழ்நாள் தடை  ஏழு வருட இடைக்கால தடையாக மாற்றப்பட்டது.  இதனால் இவரது தடைக்காலம் மூன்று நாட்களுக்குள் முடிய உள்ளது.

அதன்படி ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் முடிவு பெற்ற பின்னர், கேரள ரஞ்சி அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்த ஸ்ரீசாந்த், “எனக்கு இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது, அதேபோல் 2021 ஐபிஎல் ஏலத்தில் என் பெயரை சேர்ப்பேன்” என்று கூறியுள்ளார்.

Comments
Loading...