தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

32 மாவட்டங்களில் என்ன பிரச்சனை என்றே அதிமுக-திமுக கட்சிகளுக்கு தெரியாது – ராமதாஸ்

ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ள 5 முக்கிய அமைச்சர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.  ramadoss

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பாமக வேட்பாளரை ஆதரித்து, குறும்பட்டி பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் செய்தார்.   தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றே அதிமுக-திமுக கட்சிகளுக்கு தெரியாது என்று குற்றம்சாட்டினார்.

முதலமைச்சராக இருந்தபோது இரண்டு முறை சிறை சென்ற ஜெயலலிதா, மீண்டும் சிறை செல்வது உறுதி என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.   விஞ்ஞான ரீதியில் கொள்ளையடிப்பது எப்படி என்பது திமுகவுக்கு தான் தெரியும் என்றும் ராமதாஸ் விமர்சித்தார். திமுகவுக்கு சொந்தமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கத் தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்

Comments
Loading...