Designed by Iniyas LTD
35 ஆம் ஆண்டு வீரவணக்கம் – லெப்டினண்ட் செல்லக்கிளி அம்மான்…
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் அவர்களின் வீரவணக்க நாள் இன்று
23.07.1983 அன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான கரந்தடி கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டவர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைசிறந்த கொரில்லா தாக்குதல் தளபதிகளில் ஒருவராக விளங்கியவர் லெப். செல்லக்கிளி அம்மான் .
இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைசிறந்த கொரில்லா தளபதியாக விளங்கியவர்.
1983 யூலை மாதம் 23ம் திகதி திருநெல்வேலியில் சிங்கள இராணுவத்திற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலின்போது லெப்டினன்ட் செல்லக்கிளி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
இத்தாக்குதலில் 13 சிங்க இராணுவப் படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பல கெரில்லா அதிரடித் தாக்குதல்களுக்கும் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தி முடித்த செல்லக்கிளி அம்மான் யாழ்ப்பாணத்தின் கல்வியங்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இளம்பிராயத்திலேயே ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட இவர் விடுதலைப்பற்று மிகுந்த ஒரு வீரமறவன்.
இவரது தன்னலமற்ற உழைப்பும், தியாகமும் என்றும் எமது மக்கள் மனதில் நிறைந்திருக்கும்..
தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்..
