தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

35 ஆயிரம் அரசு ஊழியர்கள் தமிழக காவல்துறையினரால் கைது

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய  35 ஆயிரம் அரசு ஊழியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  govt-staffs

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் கூட்டமைப்புடன் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்த போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பெண் அரசு ஊழியர்கள் உள்பட மொத்தம் 35 ஆயிரம் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.   இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மாலை 5 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

Comments
Loading...