Designed by Iniyas LTD
4 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுவிட்டனர். அவர்களது படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மேலும் 40 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களின் தாக்குதலுக்கு அஞ்சி கரை திரும்பிய மீனவர்கள் இந்தத் தகவலை தெரிவித்தனர்.