தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

4 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

voting-lதமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகள், புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கையாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

Comments
Loading...