தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசின் அழைப்பால் முன்னாள் போராளிகள் அச்சம்!

IMG_5407

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை 30ஆம் திகதி கொழும்பு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் போராளிகள் அச்சமடைந்துள்ளனர்.

முன்னாள் போராளிகள் பலர் அண்மைக் காலங்களாக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் சம்வங்கள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை யான முன்னாள் போராளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருகைதருமாறு புனர்வாழ்வு அலுவலகத்தால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவித்தல் காரணமாக முன்னாள் போராளிகள் தரப்பில் பெரும் அச்ச நிலைமை மேலோங்கி காணப்படுகிறது.

Comments
Loading...