Designed by Iniyas LTD
45 லட்சம் போலி வாக்காளர்கள் – கிரிராஜன்
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை, தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளர்கள் மற்றும் முகவரி மாறி சென்றவர்களுக்கு இரட்டைப்பதிவு இருப்பது மற்றும் போலி வாக்காளர்கள் குறித்தும் ஆதாரத்துடன் இந்திய தேர்தல் தலைமை ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது 73 ஆயிரம் போலி வாக்காளர்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இருந்து பெறப்படும் ஆவணங்களும் ஆணையரிடம் படிப்படியாக சமர்ப்பிக்க உள்ளோம். வாக்காளர் பட்டியலில் உள்ள 45 லட்சம் போலி வாக்காளர்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.