தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

5 மீனவர்களின் விடுதலை குறித்து குழப்ப மான சூழ்நிலையே நீடித்து வருகிறது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22).

மீனவர்களான இவர்கள், 2011–ம் ஆண்டு நவம்பர் 28–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கையில் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இலங்கை மீனவர்கள் மூவரும் பிடிபட்டனர்.

இவர்கள் மீதான வழக்கை கொழும்பு ஐகோர்ட்டு நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனா விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 30–ந் தேதி தீர்ப்பு அளித்தார். அத்துடன் மேல்–முறையீடு செய்வதற்கு 14–ந் தேதி வரை அவர் அவகாசமும் வழங்கினார்.

இந்த தீர்ப்பு, தண்டிக்கப்பட்டவர்களின் குடும்பங்களில் பெருத்த சோகத்தையும், தமிழகம் எங்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தீர்ப்புக்கு எதிராக பரவலாக மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரத்து 200–க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கி விட்டன.

5 மீனவர்கள் மீதான மரண தண்டனையை எதிர்த்து மேல்–முறையீடு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு, அப்பீல் வழக்கின் செலவுக்காக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடந்த 8–ந் தேதி ரூ.20 லட்சம் அனுப்பி வைத்தது

இந்த நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்புக்கு எதிராக இலங்கை அப்பீல் கோர்ட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் மேல்–முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை தமிழக மீனவர்கள் சார்பில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் அனில் சில்வா உறுதி செய்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவ காரம் குறித்து இலங்கை அதிபர்   ராஜபக்சேயு டன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப் போது இந்தியா- இலங்கை இடையே உள்ள கைதிகள் பரிமாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைச் சாலைக்கு மாற்ற ராஜபக்சே சம்மதம் தெரிவித்தார்.மேலும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க உத்தரவிட்டதாக கூறபட்டது.

5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய உத்த்ரவிட்டு இருக்கும் செய்தியை கேட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 5 மீனவர்களின் உறவினர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.fishers

ஆனால் இந்த தகவல்கள் வெளிவந்து ஒரு வாரம் ஆகியும் எந்த மீனவர்கள் விடுதலையில்  எந்த முன்னேற்றமும் இல்லை 5 மீனவர்களின் விடுதலை குறித்து குழப்ப மான சூழ்நிலையே நீடித்து வருகிறது. மீனவர்கள் விடுதலையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும், பாதிக் கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரும் வலியுறுத்தி வருகின்றனர். 5 மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் உயிரை விடுவோம் என்று அவர்களது மனைவிகள் கூறி உள்ளனர்.

இதனிடையே மீனவர் களின் விடுதலையை உறுதிப்படுத்த கோரியும், மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம், காரைக்காலை சேர்ந்த 6 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் 15 பேர் இன்று சென்னை வந்தனர். அவர் கள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசுகிறார்கள். மாலையில் அவர்கள் டெல்லி செல்கிறார்கள்.

நாளை வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசு கிறார்கள். டெல்லி செல்லும் மீனவர் கள் குழுவில் ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசு, தேவதாஸ், ஜெகதா பட்டிணம்  விசைப்படகு மீனவர்கள் சங்க தலை வர் குட்டியாண்டி, முன் னாள் தலைவர் ராம கிருஷ் ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Comments
Loading...