Designed by Iniyas LTD
50 ஆவது நாளாக தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்!
கிளிநொச்சியில், பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த போராட்டம் சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.
எனவே இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இனியும் அவ்வாறு வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.