Designed by Iniyas LTD
50 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படுவதை விரும்பாத தமிழ்தரப்பு
50 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படயிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பே அதனை எதிர்ப்பதானது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதனின் பெயரை பரிந்துரை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நடைப்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக பிரதிசபாநாயகர் திலக்க சுமத்திபால வாக்களித்ததுடன் அரசாங்கத்தில் இருந்தும் விலகி கொண்டார்.
இதனை அடுத்து பிரதி சபாநாயர் பதவிக்கான வெற்றிடத்தினை நிரப்புவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு அக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரால் அங்கஜன் ராமநாதனை பிரதி சபாநாயாகராக நியமிக்குமாறு அமைச்சர் சரத் அமுனுகம பிரேரணையை சமர்பித்துள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அங்கஜன் ராமநாதன் பிரதி சாபநாயகராக நியமிக்கப்படுவதற்கு கூட்டமைப்பு முழுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைய ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதி சாபாநாயகர் பதவிக்கு 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி சிவ சிதம்பரம் தெரிவு செய்யப்பட்டு 1970 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது பிரதி சபாநாயகர் பதவிக்கு தமிழர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழர் ஒருவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படயிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பே அதனை எதிர்ப்பதானது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்லஅரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
