தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

54 பந்துகளில் சதம் போட்டு மெக்கல்லம் புதிய வரலாறு!

20-1455944878-brendon-mccullum4-600நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், தனது கடைசி டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத சரித்திரமாக மாற்றி விட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிறிஸ்ட்சர்ச் போட்டியில் அவர் உலகின் அதி வேக டெஸ்ட் சதத்தை எடுத்து சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து இடையிலானது 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்த வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்யக் களம் இறங்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பமே சொதப்பலாக இருந்தது.
4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிய நிலையில் மெக்கல்லம் அதிரடியில் குதித்தார். அவரும் கோரி ஆண்டர்சனும் இணைந்து பிரித்து மேய்ந்து விட்டனர்.

Comments
Loading...