தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

56 சீன படையதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பெரியதொரு இராணுவ அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஷி ஷோங்வூ தலைமையிலான 56 சீன படை அதிகாரிகளைக் கொண்ட குழுவே சிறிலங்காவுக்கு கல்விச் சுற்றுலாவை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள், கடந்த கால போர் அனுபவங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த விடயங்களை நேரில் அறிந்து கொள்ளவே சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக குழு கொழும்பு வந்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் ஷி ஷோங்வூ தலைமையில், ஐந்து அதிகாரிகள், நேற்றுக்காலை சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

Comments
Loading...