Designed by Iniyas LTD
6வது உலக கபடிப்போட்டி! நவம்பர் 3 இல் தொடங்குகிறது
6-வது உலக கோப்பை கபடி போட்டி நவம்பர் 3-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பஞ்சாப்பில் 14 இடங்களில் நடைபெறுகிறது. 14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும்.
இதில் ஆண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2 கோடியும், பெண்கள் பிரிவில் வாகை சூடும் அணிக்கு ரூ.1 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பஞ்சாப் துணை முதல்-மந்திரி சுக்பிர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.