தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

6 விக்கட் வித்தியாசத்தில் பெங்களூரை வென்ற மும்பை இன்டியன்ஸ்

பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூர் றொயல் சேலஞ்சர், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின.ipl

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 151 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 68(53) ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் பேபி இறுதி 13 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்தார். விராட் கோஹ்லி 7 ஓட்டங்களும், கெய்ல் 5 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மும்பை அணியில் கே.ஹெச்.பாண்டியா 4 ஓவர்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து 152 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. ஒரு ஓட்டத்தில் பார்த்தீவ் பட்டேல் ஆட்டமிழக்க அணித்தலைவர் ரோகித் சர்மாவும், ராயுடும் நிதான ஆட்டத்தை கையாண்டனர்.

இருப்பினும் 25 ஓட்டங்களில் ரோகித் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரனாவும் 9 ஓட்டத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பொல்லார்டும், பட்லரும் ஆட்டத்தை கையிலெடுத்தனர். பொல்லார்டு 2 சிக்ஸர்களும், பட்லர் 3 சிக்ஸர்களும் பறக்க விட்டனர். இதனால் 18.4 ஓவர்களில் மும்பை இண்டியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்டு 35(19) ஓட்டங்களும், பட்லர் 29(11) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணியின் கர்னல் பாண்டியா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 10 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூர் அணி 6வது தோல்வியை தழுவியுள்ளது. நாளை ஐதராபாத்தில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Comments
Loading...