தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

7ஆண்டுகளின் பின்னர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது பாக்கிஸ்தான் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி (105 புள்ளிகள்) 9 ரேட்டிங் புள்ளிகள் பெற்று உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.pakisthan

2007-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற போது 3-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு 3-வது இடத்துக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

தென் ஆப்பிரிக்க அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்றதால் 6 ரேட்டிங் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலிய அணி (117 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறது.

இங்கிலாந்து அணி ஒரு இடம் பின்தங்கி 104 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இலங்கை அணி ஒரு இடம் சரிந்து 101 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இந்திய அணி ஒரு இடம் இறக்கம் கண்டு 96 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து (93 புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ் (75 புள்ளிகள்), ஜிம்பாப்வே (39 புள்ளிகள்), வங்காளதேசம் (19 புள்ளிகள்) அணிகள் முறையே 7 முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

Comments
Loading...