Designed by Iniyas LTD
7விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புனே அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இனி வரும் போட்டிகளில் ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பு இழந்துவிடும், என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற புனே கேப்டன் டோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர், அதிகபட்சமாக கருண் நாயர் 32 ரன்களும், டுமினி 34 ரன்களும் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிய பிராத்வெயட் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 162 ரன்கள் எடுத்தது, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணி களமிறங்கியது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உஸ்மான் கவாஜா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தோனி 27 ரன்கள் எடுத்தார். இறுதியில் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் புனே அணி வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, சிறப்பாக விளையாடிய ரகானே 63 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.