Designed by Iniyas LTD
புலனாய்வாளர்களின் தீவிர காண்காணிப்பில் தாயகத்தில் உறவுகள் அஞ்சலி!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்படுகின்றது. புலனாய்வாளர்களின் தீவிர காண்காணிப்பில் தாயகத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்களை நாட்டுவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நினைவுக்கற்களை நாட்டுவதற்கு ஏற்பாடுசெய்த அருட்தந்தை எழில்ராஜன் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைகூரும் விதமாக பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டப்பட்டுள்ளன. அஞ்சலி நிகழ்வுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் அதிக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




