Designed by Iniyas LTD
8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிரடியாக மாற்றம் செய்த ஜெ
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில், 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிரடியாக மாற்றம் செய்து அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
புதிய வேட்பாளர்கள் பட்டியலில் அமைச்சர்கள் ப.மோகன், சண்முகாதன்,பழனியப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் தமிழரசிக்குப் பதிலாக வெல்லமண்டி நடராஜனும்,ஈரோடு மேற்கு தொகுதியில் வரதராஜனுக்குப் பதில் கே.வி.ராமலிங்கமும், அரக்கோணம் தொகுதியில் கோ.சி.மணிவண்ணனுக்கு பதில் சு.ரவியும், கோவில்பட்டி தொகுதியில் ராமானுஜம் கணேசனுக்கு பதில் கடம்பூர் ராஜூவும், பாளையங்கோடை தொகுதியில் தமிழ்மகன் உ ஷேனுக்குப் பதில் ஹைதர் அலியும், சங்கராபுரம் தொகுதியில் ராஜசேகரனுக்குப் பதில் ப.மோகனும், ஸ்ரீவைகுண்டத்தில் புவனேஸ்வரனுக்குப் பதில் எஸ்.பி.சண்முகநாதனும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் குப்புசாமிக்குப் பதிலாக பி,பழனியப்பனும் புதிய வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வேட்பாளர்கள்:
- திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்
- அரக்கோணம் – சு.ரவி
- பாப்பிரெட்டிபட்டி – பி.பழனியப்பன்
- ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்
- கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ
- சங்கராபுரம் – ப.மோகன்
- ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்
- பாளையங்கோட்டை – எஸ்.கே.ஏ.ஹைதர் அலி