தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாங்கனியின் மகிமை

மனிதனின் ஆரோக்கிய வாழ்வில் மாம்பழத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாம்பழத்தில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் மாம்பழம் முக்கனிகளுள் ஒன்று என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. மாங்கனியானது, 6 நோய்களை நம்மிடம் அண்ட விடாது.பல வகைகளில் கிடைக்கும் மாம்பழத்தில் உள்ள மருத்துவ சிறப்பம்சங்களை இனி பார்க்கலாம்…

புற்றுநோய் போராளி

புற்றுநோய் ஒரு உயிர்க்கொல்லி நோய். உடல் உறுப்புகளை படிப்படியாக நாசம் செய்து உயிருக்கு உலை வைக்கும் கொடிய நோய்.

மாம்பழத்தில் உள்ள ‘பாலிபினோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்’ (polyphenol antioxidant) புற்றுநோயை தடுக்கவல்லமை பெற்றது.

கொழுப்பு எரிப்பான்

மாம்பழம் கொழுப்பை கட்டுப்படுத்தும் வித்தகனாக திகழ்கிறது.

நார்ச்சத்துகள், பெக்டின், விட்டமின் சி ஆகியவை அதிகமாக கொண்டுள்ள மாங்கனி 90% வரை கொழுப்பை குறைக்க வழிவகை செய்கிறது.

ரத்த அழுத்த நிவாரணி

மாம்பழத்தில் உள்ள மக்னீஷியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஆஸ்துமா தடையாளன்

மாம்பழத்திலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சி ஆகியவை ஆஸ்துமா வருகின்ற அறிகுறி தெரிந்தாலே முட்டுக்கட்டை போட்டு வந்த வழியே விரட்டி விடும்.

பார்வைக்கு ஒளியூட்டி

மாம்பழத்தில் உள்ள விட்டமின் எ பார்வை குறைபாடுகளை நீக்கி தெளிவான பார்வையை ஊட்டுகிறது.

இரத்தசோகை அண்டவிடாதவன்

இரும்பு சக்தியை கொண்டுள்ள மாம்பழம் இரத்த சோகையை தவிடு பொடியாக்கிவிடும் சிறப்பம்சம் கொண்டது.

தினமும் தவறாமல்  மாம்பழங்களை சாப்பிட்டு வருவது நமது உடல் ஆரோக்கியத்துக்கு மேன்மையூட்டும்.

Comments
Loading...