Designed by Iniyas LTD
90வது பிறந்த நாளை கொண்டாடும் எலிசபெத் மகாராணி!
எலிஸபெத் மகாராணியாரின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி புதிதாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் ஒன்றை காணலாம்.
மகாராணியார் தனது பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப் பிள்ளைகள் சகிதம் தோன்றும் இந்தப் புகைப்படம் கடந்த மாதம் வின்ட்ஸர் மாளிகையில் அமெரிக்க முன்னணி புகைப்படக் கலைஞரான ஆனி லெயிபோவிட்ஸால் படமாக்கப்பட்டுள்ளது.
மகாராணியார் இந்தப் புகைப்படத்தில் தனது மடியில் இளவரசர் வில்லியம் – -கேட் தம்பதியின் புதல்வியான இளவரசி சார்லொட்டை அமரவைத்து அரவணைத்தவாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது.