Designed by Iniyas LTD
முல்லைத்தீவு, சாலைப் பிரதேசத்தில் வெடிபொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு, சாலைப் பிரதேசத்தில் பொதுமக்களின் காணியில் இருந்து வெடிபொருள்கள் சில நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி ஒன்றில் குழி ஒன்று வெட்டியபோது வெடிபொருள்கள் தென்பட்டுள்ள நிலையில் காணியின் உரிமையாளர் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
நீதிமன்றம்
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்குச் சென்று வெடிபொருள்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
