Designed by Iniyas LTD
92 விவசாய சங்கத்தினர் சாகும்வரை உண்.விர. போராட்டம்
விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்யகோரி இன்று முதல் 92 விவசாய சங்கத்தினர் இணைந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
தஞ்சை மாவட்டம் சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நடடிக்கை வழக்கமான நடடிக்கை எனவும் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்ற நேற்று மாலை வரை அனைத்து விவசாயிகள் கூட்டு இயக்கம் கெடு விதித்து இருந்தது. ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஒரத்தநாட்டில் திட்டமிட்டப்படி சாகும்வரையிலான தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்க உள்ளதாகவும் இதில் 92 விவசாய சங்கத்தினர் பங்கேற் உள்ளதாகவும் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சுகுமாறன் கூறியுள்ளார்.