Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்…
மேஷம்:
எதிரிகளால் வீண் சிரமம் உருவாகலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை மிதமான அளவில் இருக்கும். வருமானம் சுமாராக இருக்கும்.
ரிஷபம்:
தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். சேமிக்கும் விதத்தில் வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்:
நல்லவர் செயலை தவறாக கருதும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்கவும். மிதமான பணவரவு கிடைக்கும்.
கடகம்:
தாமதமான பணிகளை புதிய முயற்சியுடன் துவங்குவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற்று புதிய இலக்கை அடையும். வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்:
நண்பருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும்.உபரி வருமானம் கிடைக்கும்.
கன்னி:
பணியில் உள்ள சிரமத்தை சமயோசிதமாக சரி செய்யவும். தொழில், வியாபாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும்.அளவான பணவரவு கிடைக்கும்.
துலாம்:
உங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட பணி நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும்.
விருச்சிகம்:
திட்டமிட்ட செயல்களில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும்.
தனுசு:
சமூக நிகழ்வில் புதிய அனுபவம் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டபணி இலகுவாக நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.
மகரம்:
உங்களை சிலர் தமக்கு சாதகமாக செயல்பட கேட்பர். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது நல்லது. சுமாரான பணவரவு கிடைக்கும்.
கும்பம்:
பெற்றோரின் சொல்லுக்கு மதிப்பளிப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற இனிய அணுகுமுறை உதவும். சுமாரான அளவில் பணம் கிடைக்கும்.
மீனம்:
எதிர்கால நலன் குறித்த சிந்தனை மேலோங்கும். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். ஆதாயம் சீராகும்.