Designed by Iniyas LTD
முள்ளிவாய்க்காலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞர் மற்றும் யுவதிகள் ..
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர்களுக்கிடையில் இன ஒற்றுமை சகவாழ்வு நல்லிணக்கத்திற்கான உறவுப் பலமான இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (23) மாலை 3.௦௦ மணியளவில் முல்லைத்தீவு ஒட்டுசுடுட்டான் முத்துவிநாயகபுரத்தில் நடைபெற்றுள்ளது.
2025 ல் செல்வந்த நாடு என்ற எண்ணக்கருவினை வெற்றிகொள்வதற்கான இனங்களுக்கிடையில் சமாதானம்,சகவாழ்வு, நிலைத்து நிற்கக்கூடிய அமைதியான சனசமூகம் ஒன்றை கட்டி எழுப்பும் நோக்கிலும் தேசிய நல்லிணக்கத்தினை கட்டி எழுப்பும் நோக்கிலும் புத்தளத்தினை சேர்ந்த 30 இளைஞர் யுவதிகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளனர்
புத்தளத்திலிருந்து வருகைதந்த 3௦ சகோதர மொழி (சிங்கள ) இளைஞர் யுவதிகள் முத்துவினாயகபுரத்திலுள்ள வீடுகளில் 27 ம் திகதிவரை தங்கி நின்று தமிழ் மக்களது கலை கலாச்சார விழுமியங்கள் தொடர்பில் தெரிந்துகொள்வதோடு தமிழ் இளைஞர் யுவதிகளோடு இணைந்து சிரமதானம் விளையாட்டு கலை கலாச்சார நிகழ்வுகளிலும் ஈடுபடவுள்ளதோடு இந்த நிகழ்வு நிறைவடைந்ததும் முத்துவினாயகபுரத்திலுள்ள 3௦ இளைஞர் யுவதிகள் புத்தளம் சென்று அங்கு இவ்வாறானதொரு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளநிலையில்
இந்த நிகழ்வினுடைய இரண்டாம் நாளான நேற்று புத்தளத்திலிருந்து வருகைதந்த 3௦ சகோதர மொழி (சிங்கள ) இளைஞர் யுவதிகள் முத்துவினாயகபுரத்திலுள்ள 3௦ இளைஞர் யுவதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பல இடங்களுக்கு சுற்றுலாவாக சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுக்கு சென்றதோடு இறுதி யுத்தத்தில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு சென்று பார்வையிட்டதோடு முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்
இதனை தொடர்ந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று அங்கு கடற்கரையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை அகற்றும் முகமாக சிரமதானப்பணியிலும் ஈடுபட்டனர்

