Designed by Iniyas LTD
வடக்கில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவம் தயாராகவே உள்ளது. – இராணுவத் தளபதி..
வடக்கில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த, மீள ஒருங்கிணைக்க மற்றும் முகாம்களை மீண்டும் அமைப்பதற்கு இராணுவம் தயாராகவே உள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இராணுவத்துக்கு தேவையான அதிகாரங்களை குறிப்பிட்டளவு காலத்துக்கு வழங்கினால் வடக்கில் செயற்படும் குழுக்களை அடக்கி விட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் தனது கடமைகளை செய்யும் என்றும், இராணுவத்துக்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அனைவருக்கும் உரிமையுள்ளதாகவும் இராணுவம் பலமாக உள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு அதன் முக்கியமான கடமைகளில் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவம் நாட்டைப் பாதுகாக்க எப்போதும் தயாராகவே இருக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.