தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சம்பூர் மக்கள் பூர்வீக மண்ணில் வாழவே விருப்பம்.

download (3)
சம்பூர் பிரதேசத்தின் காணி அபகரிப்பு மூலம் சிறீலங்காவின் காணிச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. காணி, நிலம் என்பது ஒவ்வொருவரினதும் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், வாழ்க்கைக்கு பாதுகாப்பு தருவதாகவும் உள்ளது. எனவே சம்பூர் மக்கள் தமது பூர்வீக நிலங்களிலேயே வாழ விரும்புகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் பரம்பரை, பரம்பரையாக வாழ்வது அவர்களது பிறப்புரிமை ஆகும். 1966 ஆம் ஆண்டு மனித உரிமை சமவாயம் அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எந்த நபரொருவரது காணியையும் உரித்தாளியின் அனுமதியின்றிப் பறிக்க முடியாது என்று மனித உரிமை சமவாயம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சமவாயங்களின் கொள்கை, கோட்பாடு என்பவற்றை ஏற்றுக்கொண்டு சிறீலங்கா, சம்பூர் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீளக்குடியேற அனுமதிப்பது தான் முறை.
சம்பூர் மக்கள் தமது தாய், தந்தையர் வாழ்ந்த பூர்வீக நிலங்களிலேயே தாங்கள் வாழ விரும்புகிறார்கள் இதற்கு சிங்கள அரசு சட்டங்களை போட்டு முட்டுக்கட்டை போடமுடியாது என்று சி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...