Designed by Iniyas LTD
வடமாகாண சபையின் இறுதி அமர்வு இன்று…..
வட மாகாண சபையின் பதவிகாலம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் அதன் இறுதி அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த அமர்வு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
இதன்போது வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 5 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது உரையாற்றவுள்ளார்.
அதேபோன்று ஏனைய உறுப்பினர்களும், குறித்த அமர்வில் தங்களால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பில் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிகபப்டுகின்றது.
வடமாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தற்போது ஐந்தாண்டு வரையான காலத்திற்குள் 133அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 437 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் சபையின் இறுதி அமர்வான இன்றைய தினமே சபைக்கான கீதம் முன்மொழியப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.