Designed by Iniyas LTD
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் – அமெரிக்கா அறிவிப்பு…
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தியது.
ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகி இருந்தது.
இந்நிலையில் ஈரான்மீது விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் நிறுத்த வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
