Designed by Iniyas LTD
வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 10 இலட்சம் ரூபா கொள்ளை – வவுனியாவில் சம்பவம் …
வவுனியா எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் இருந்து வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 10 இலட்சம் பணம் இனந்தெரியாத இரு நபர்களினால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சமபவம் நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து எடுத்துசெல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரினால் குறித்த பணம் வங்கி ஒன்றில் இயந்திரமூடாக பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா இ.போ.ச சாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரே குறித்த நபரை வழிமறித்து பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளைச்சம்பவம் மேலதிக விசாரணைகளைப் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.