Designed by Iniyas LTD
இலங்கையின் அடுத்த பிரதமர் யார் ? ஜனாதிபதியின் இறுதி முடிவு…
இலங்கையின் அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, சமல் ராஜபக்ச அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவையே நியமிக்க வேண்டும் என, ஐக்கிய தேசிய முன்னணி உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.
எனினும் ரணிலுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் பதவி வழங்கப்பட மாட்டாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நெருக்கடியான நிலையில் சமல் ராஜபக்ச, அல்லது நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை மஹிந்தவை பிரதமராக நியமித்தமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.