Designed by Iniyas LTD
தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா இலங்கைக்கு அவசர எச்சரிக்கை…
இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா இலங்கைக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பிரச்சினை தொடர்ந்தால் அதன் தாக்கத்தை இலங்கை மிக விரைவில் உணரவேண்டிய நிலை ஏற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமைகள் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் இது அவசரமாக தீர்க்கப்படவேண்டும். அரசியல் நெருக்கடி என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அதில் நாங்கள் தலையிடவிரும்பவில்லை என்றும்,
ஆனால் இதுவே தொடர்ந்தால் பொருளாதார ரீதியில் பல பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டியேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு எதிர்காலத்தில் இலங்கை தனது நட்பு நாடுகளுடன் எவ்வாறான நம்பிக்கையைப் பேணப்போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசமைப்பின்படி சட்ட ரீதியான ஒரு அரசு அமைவதற்கு ஜனாதிபதி வழிவகுக்கவேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
