தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை மறுத்துள்ள ஜனாதிபதி..

ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் அவர்களின்  கோரிக்கையை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

இதுதொடர்பில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வியில் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி  கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதேவேளை நாட்டின் அரசியலமைப்பின்படி,   பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி புதிய ஆணை கோரி,  ஜனாதிபதித் தேர்தலுக்கு அறிவிப்பை வெளியிட முடியும் என்கின்ற நிலையிலேயே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...