தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி இளைஞன் மன்னாரில் கைது.

download (2)

மன்னார் வங்காலைப்பாடு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டு வந்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறீலங்கா கடற்படையினர் நேற்று கைது செய்து தலைமன்னார் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

தற்போது மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சோதனைகளும்,தேடுதல்களும் இடம் பெற்றும் வரும் நிலையிலே குறித்த இளைஞர் கிளிநொச்சி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த இளைஞர் சிறுத்தோப்பு கிராமத்தில் தங்கி இருந்து வங்காலைப்பாட்டில் கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது குறித்த இளைஞர் தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவ்விடையம் தொடர்பாக தலைமன்னார் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கும் போது கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த இளைஞரை மன்னார் வங்காலைப்பாட்டு கிராமத்தில் வைத்து கடற்படையினர் கைது செய்து நேற்று தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றார். விசாரனைகளின் பின் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் அந்த இளைஞர் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்னாள், முன்னாள் போராளிகள் அனைவரையும் படைகள் தங்கள் முகாமுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருந்தது தெரிந்ததே. தற்போது தமிழர் தாயகத்தில் தொடரும் தேடுதல்கள் கைதுகள் காலணமாக தொழில் நிமித்தம் வேறுமாவட்டங்களுக்கு செல்வோர் கைதுசெய்யப்படுவதால் மக்கள் பலர் தொழிலை இழந்து வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Comments
Loading...