Designed by Iniyas LTD
புதுக்குடியிருப்பில் இருந்து மாடுகடத்தல்… இருவர் கைது!..
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று முன் தினம் அனுமதியற்ற முறையில் பாராஊர்த்தி ஒன்றில் 5 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி என்பன முல்லைத்தீவு பகுதிக்கு எடுத்து செல்ல முற்பட்டபோது புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
விசுவமடு,முத்துஜயன் கட்டுபிரதேசத்தினை சேர்ந்த இருவர் பார ஊர்தியில் அனுமதியற்ற நிலையில் குறித்த மாடுகளை எடுத்துசெல்ல முற்பட்டுள்ளார்கள் .
தொடர்புடைய பதிவு
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய உதவிபொலீஸ் பரிசோதகர் பண்டார தலைமையிலான குழுவினர் குறித்த நபர்களையும் மாடுகளையும் கைதுசெய்துள்ளார்கள் .
இந்தநிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.