தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியா இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்தி விவசாயம் செய்யும் இராணுவத்தினர்

வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக  தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் தமது காணிகளை   உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்மொன்றை அப்பகுதி மக்கள்  இன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த  ஆர்ப்பாட்டம் வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் தமது பூர்வீக காணிகளை  விடுவிக்க வேண்டும் என  பதாதைகளை ஏந்தி  கோசங்களை எழுப்பியுள்ளனர்.

இதன்போது ‘எங்கள் மூதாதையரின் காணியில் இராணுவம் விவசாயம் செய்கின்றது உடன் விடுவிக்கவேண்டும் என்றும்,

ஜனாதிபதியின் சொல் பொய்’, அரசே எமது விவசாய நிலங்களை விட்டு விடு, விவசாய நிலங்களையும் மேச்சல் நிலங்களையும் விட்டு வெளியேறு போன்று வாசகங்கள் எழுதிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகனிடம்  மகஜரொன்றினையும் அவர்கள்  கையளித்துள்ளனர்.

இதேவேளை  கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்க அதிகளவிலான நிலங்கள் தேவைப்பட்டன.

இதனையடுத்து அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் இராமியன்குளம் பகுதி நிலத்தை விட்டுத்தருமாறும் இந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதும், அவர்களது நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

எனினும்   கடந்த 2013 ஆம் ஆண்டளவில்  மக்கள் மீள்குடியமர்த்தபட்ட போதும் இராணுவத்தினர் குறித்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதுடன் இதுவரை குறித்த நிலங்கள் விடுவிக்கப்டவில்லை எனவும்  ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...