தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மக்களை மிரட்டி நிதி வசூலித்த சிங்கள இளைஞர்கள்..

  மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சானில்  ஆதரவற்ற சிறுவர்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டி   சிங்கள இளைஞர்கள் நால்வர்  நிதி  வசூலித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள்மீது, சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள்  அவர்களை துரத்தி பிடித்து  நையப்புடைத்துள்ளனர்.
குறித்த  சம்பவம் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மடுப் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் அவர்களைக் காப்பாற்றும் விதமாக செயற்பட்டதோடு ,  தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை  சம்பவம் தொடர்பில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...