தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் இனம் தெரியாத சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சுவரொட்டிகள்…

மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாத சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மக்களின்  ஒற்றுமையை குலைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு போன்ற சில பகுதிகளில் ,

“சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்” என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் மன்னார் மாவட்டம் அனைத்து மதத்தினருக்கும் உரிய பூமி எனவும் எந்த தனி நபர்களும் எங்கள் மத ஒற்றுமையை இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் சீர்குழைக்க முடியாது என பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறான மத வாத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Comments
Loading...