Designed by Iniyas LTD
இரண்டாவது தடவையும் தோற்கடிக்கபட்ட கல்முனை மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம்….
கல்முனை மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் நேற்று (14) இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த மாதம் 26ம் திகதி வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது, தோற்கடிக்கப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.
இதனையடுத்து, குறித்த வரவுசெலவுத்திட்டமானது திருத்தம் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய சபை அமர்வின்போது, மாநகர முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சாய்ந்தமருது சுயேச்சை அணியினர், குதிரை மற்றும் கொடி உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி சேனைக்குடியிருப்பு உறுப்பினர் ஒருவர் உட்பட மொத்தம் 25 பேர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.