தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில், சிறப்புற இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம்வழங்கலும்…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மருதமடுக் கிராமத்தில் காந்தள் புலம்பெயர் அமைப்பின் ஏற்பாட்டில்,தைப்பொங்கல் விழாவானது மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் மாணவர்களுக்குக் கற்றல் கருவிகளும், முதியோர்களுக்கான மாதாந்த உதவு தொகைகளும் காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வானது காந்தள் புலம்பெயர் அமைப்பின் ‘உறவுகளுடனான பாசம்பகிரும் பயணம்‘ எனும் செயற்றிட்டத்தில், தைப்பொங்கல் நாளான 15.01.2018 நேற்றைய நாள், மருதமடுப் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்றுள்ளது.

மேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில், மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, மரபு வழியில் தைப்பொங்கல் பொங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன, அதனையடுத்து மாணவர்களது கலை நிகழ்வுகள், விருந்தினர்களது உரைகள், என்பனவும் இடம்பெற்றன.

அத்தோடு இந் நிகழ்வில் 200பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் கருவிகளும், 30 முதியோர்களுக்கான மாதாந்த உதவு தொகைகளும் காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள், புதுக்குடியிருப்புப் பிரதேசசபையின் உப தலைவர் க.ஜனமேஜயந்,   கோம்பாவில்  ,கிராம உத்தியோகத்தர் இ.தேவகி, மாணிக்கபுரம் கிராம அலுவலர் தி.உமாயிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய காந்தள் புலம்பெயர் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களான மு.காயத்திரி மற்றும் நீ.நிக்சன் ஆகியோருடன், மாணவர்கள்,   பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...