Designed by Iniyas LTD
முல்லையில் மின்சாரம் தாக்கியதால் ஐந்து பிள்ளைகளின் தாய் பலி..
முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கரும்புள்ளியான் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய மணிவண்ணன் சுமதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரும்புள்ளியான் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நீர் இறைக்கும் மோட்டர் மூலம் நீர் இறைத்துக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக அதில் சிக்கி குறித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
