Designed by Iniyas LTD
மன்னாரில் கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைது..
மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு குறித்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை அடுத்து, பாலத்தில் ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா அவர்களிடம் இருந்து பற்முதல் செய்யப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் உடுகம மற்றும் ஜாஏல சேர்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்ட நபர்களுடன், கேரள கஞ்சா பொதி மற்றும் வாகனம் என்பன மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.