Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்….
மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவு ரையை ஏற்றுக் கொள்வார்கள்.
ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்றுநிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கடகம்: எதிர்ப்புகள் அடங்கும்.தாய்வழி உறவினர்களுடன்கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப் பீர்கள்.
சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக்கொள்வீர்கள்.
கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம்பிறக்கும். அழகு, இளமைக்கூடும். வெளிவட்டாரத்தில்புது அனுபவம் உண்டாகும்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டிவரும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்.
விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் கவனம் தேவை.
தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார்.
கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குவரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.