தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மடு தச்சணாமருதமடுவில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர ஏற்படு செய்யப்பட்ட நிகழ்வை தடுத்த நிறுத்திய இராணுவம்..

கடந்த 29.01.2008 அன்று இலங்கை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கொடூர கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்,

11ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தாக்குதல் நடைபெற்ற இடமான மடு தச்சணாமருதமடு பிரதான வீதியில் நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக,  கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் ,உறவினர்கள் , மதகுருமார்கள்,  பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,அதிபர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒழங்கு படுத்தப்பட்டு நிகழ்வு நடைபெற இருந்த நிலையில் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வாளர்களாலும் பொலிசாராலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது,

எனினும்  அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு குறிப்பிட்ட மக்களுடன் நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது .

இதேவேளை இன்றைய தினம்  கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு துபி ஒன்றும் நிறுவப்பட்ட இருந்த நிலையில் அதுவும் இராணுவ புலனாய்வாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால்  அடுத்த வருடம் எத்தடை வரினும் எல்லா வற்றையும் வென்று அவர்களுக்கு நினைவு துபி கட்டப்பட்டு நினைவு நாள் நினைவுகூரப்படும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...