தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிலாவெளியில் உள்ள மசாஜ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதி, அலஸ்தோட்ட பகுதியில், மசாஜ் நிலையங்களுக்கு எதிராக, பொதுமக்கள்   ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான மசாஜ் நிலையங்கள் காணப்படுவதாகவும் அதனால் சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாகவும் இந்த மசாஜ் நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்மக்கள் வலியுறுத்தினர்.

அலஸ்தோட்டம் அபிவிருத்தி மகளிர் சங்கம், ஸ்ரீ நாகம்மாள் ஆலய நிர்வாக சபை, ஸ்ரீ நாகம்மாள் ஆலய அறநெறிப் பாடசாலை, அலஸ்தோட்டம் இளைஞர் அணி ஆகியோர் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை  முன்னெடுத்தனர். “மசாஜ் நிலையங்களில் மூடு”, “சமூகச் சீர்கேடுகளை இல்லாமல் ஒழி” போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

Comments
Loading...