Designed by Iniyas LTD
ஆஸ்திரேலியாவில் ஆள் உயர முட்டை கோஸ்…
ஆஸ்திரேலியாவில் ஆள் உயர பிரமாண்ட முட்டை கோஸை விளைவித்து பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஜாக்கி மார்ஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் ரோஸ்மேரி நார்வுட். இயற்கை விவசாயத்தில் இவருக்கு பெரும் ஆர்வம் உண்டு.
அவர் கணவர் சீன் கேட்மேனுடன் இணைந்து, தனது தோட்டத்தில் பிரமாண்ட முட்டை கோஸை விளைவிக்க முடிவு செய்தார்.
சுமார் ஒன்பது மாத கால முயற்சிக்கு பிறகு ரோஸ்மேரியின் தோட்டத்தில் ஆள் உயரத்திற்கு பிரமாண்டமாக முட்டை கோஸ் வளர்ந்துள்ளது.
இதனை பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில் தங்கள் தோட்டத்தை இயற்கை சுற்றுலா தளமாக மாற்ற ரோஸ்மேரி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
