Designed by Iniyas LTD
ஜெனிவாவில் சிங்கள இனவாத அரசுக்கு எதிரான அழுத்தங்களை மூடி மறைக்கும் வேலைகள் …
ஜெனிவாவில் சிங்கள இனவாத அரசுக்கு எதிரான அழுத்தங்களை மூடி மறைக்கும் வேலைகள் நடைபெறுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு ஆதராமாக சிங்கள தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கடந்த 2015 வழங்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இம்முறை இலங்கை அரசாங்கத்தினால் இருவேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ,
இந்த நிலைமையில் இலங்கைமீது சர்வதேசம் அதிகமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிடமிருந்து இருவேறுபட்ட நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படும் சூழ்நிலையானது, சர்வதேச சமூகத்திற்கு இலங்கையில் காணப்படும் குழப்பநிலையினை வெளிப்படுத்தும் என்றும்,
எனவே இந்தச் சூழ்நிலையானது இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக வும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் கடந்த ஜெனீவாத் தீர்மானங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு சர்வதேசம் தனது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்கமாட்டாது” என ஜெஹான் பெரேரா அந்த அறிகையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
